ஷிகர் தவான் & ஷ்ரேயாஸ் அய்யரின் தீயான டான்ஸ்.. மொத்த டீமும் கமெண்ட்-ல இறங்கிடுச்சு😂.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் ஆகிய இருவரும் இணைந்து நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி 20 தொடரை சிறப்பாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரை ஆடுவதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில், முதலாவதாக டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 09 ஆம் தேதியன்று ஆரம்பமாகிறது.
இந்த தொடரில் காயம் காரணமாக ஷ்ரேயாஸ் அய்யர் காயம் காரணமாக இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியானது. 2022 ஐ பொறுத்தவரையில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு சிறப்பாகவே அமைந்திருந்தது. இந்த ஒரு ஆண்டில் அவர் 48.75 என்ற ஆவரேஜுடன் 1,609 சர்வதேச ரன்களை எடுத்திருந்தார். இதில் ஒரு சதம் மற்றும் 14 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்திருந்தார் ஷ்ரேயாஸ் அய்யர்.
இவர் தற்போது NCA-வில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். மற்றொருபக்கம் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அந்த தொடருக்கு தேர்வாகவில்லை. ICC தொடர்களில் எப்போதும் அதிரடி காட்டும் தவான் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு பெறுவாரா? என ரசிகர்கள் இப்போதே பேசி வருகின்றனர்.
இந்நிலையில், தவான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஷ்ரேயாஸ் அய்யருடன் நடனமாடுகிறார். சமீபத்தில் ட்ரெண்டாகி வரும் Calm Down பாடலுக்கு இருவரும் நடனமாட இந்த வீடியோவும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், இந்த கிரிக்கெட் அணியின் முகமது சிராஜ், சூரிய குமார் யாதவ், மயங்க் அகர்வால் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
