போடு.. HOME WORK தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.
முகப்பு > செய்திகள் > தமிழகம்1-ஆம் மற்றும் 2-ஆம் வகுப்பு பள்ளி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு குறிப்பிட்ட அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
1 வருடம் முன்பு வரை, கொரோனா சூழலில் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி வகுப்புகளை கவனித்து வந்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள் முறையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டனர். எல்லாம் இயல்பு நிலைக்கு நியூ நார்மல் என்கிற சூழலில் வந்துவிட்டது.
இந்நிலையில் 1-ஆம் மற்றும் 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வீட்டு பாடம் தருவது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வீட்டு பாடம் கொடுப்பதற்கு தடை விதித்திருக்கும் நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கென, பள்ளிகளில், பறக்கும் படையை கொண்டு 1-ஆம் மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு படம் தராமல் இருப்பதை உறுதி செய்து அந்த ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டிருக்கிறது . எனவே இனிமுதல் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் தத்தம் பள்ளிகளில் பயிலக்கூடிய 1-ஆம் மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி வீட்டுப்பாடம் தரப்படுகிறதா? தரப்படவில்லையா? என்கிற அறிக்கையை ஆய்வு செய்து முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு சமர்பிப்பார்கள் என்றும் தெரிகிறது. எனினும் வீட்டு பாடம் தொடர்பான, பள்ளிக்கல்வி துறையின் தற்போதைய இந்த அறிவிப்பு என்பது 1-ஆம் மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மற்றபடி உயர்வு வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி அவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பது தொடர்பான எந்தவித தடை உத்தரவு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.