"சீனா பொண்ணு, மலேசியா பையன்".. காதல் நடுவே மலர்ந்த தமிழ் மொழி.. "ஜோடியா பேசுறத பாக்கணுமே"!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக காதலுக்கு மொழி, மதம், இனம் என எந்தவொரு விஷயமும் குறுக்கே நிற்காது என பலரும் கூறுவார்கள். இவை அனைத்தையும் தாண்டி இருவரின் மனதை அறிந்து உருவாகும் காதல் காலம் கடந்தும் சேர்ந்து நிற்கும் வகையில் உன்னதமான ஒன்றாகும்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "இது தான் சரியான நேரம்"... திடீர்ன்னு ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முடிவு.. கலங்கிய ரசிகர்கள்!!
இப்படி அனைத்தையும் தாண்டி ஜெயிக்கும் காதல் குறித்த பல்வேறு செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். இந்திய நாட்டை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடுகளில் போகும் சமயத்தில் அங்குள்ள பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
இப்படி காதல் முன்பு தடையாக இருக்கும் ஏராளமான விஷயங்களை கடந்து நிறைய காதல்கள் ஜெயிக்கவும் செய்கிறது. அந்த வகையில், மலேசிய இளைஞர் ஒருவரும், சீன பெண் ஒருவரும் காதலித்து வருவது தொடர்பான செய்தியும் அதன் பின்னால் உள்ள காரணமும் அதிக வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
மலேசியாவை பூர்வீகமாக கொண்ட இளைஞர் கிறிஸ்கோ. பேஸ்புக் வழியாக சீனாவை சேர்ந்த கேட்டி என்ற பெண்ணுடன் பழக்கப்பட்டுள்ளார் கிறிஸ்கோ. இருவரது தாய்மொழியும் வேறு என்று சூழலில் மாறி மாறி ஒருவர் பேசிப் பேசி நாளடைவில் அவர்கள் காதலிக்கவும் தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. மேலும் தனது காதலி கேட்டிக்கு சீன மொழியிலும் காதலை வெளிப்படுத்தி உள்ளார் கிறிஸ்கோ.
இதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் சூழலில், இவர்களை இணைக்கும் மொழியாக தமிழ் இருந்து வருவது தான் இந்த ஜோடியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் சமையல் குறித்தும், தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஏராளமான வீடியோக்களையும் கிறிஸ்கோ - கேட்டி ஜோடி பகிர்ந்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
அதுவும் தமிழில் பேசியும், தமிழ் பாடல்களை பாடியும் இவர்கள் பகிர்ந்து வரும் வீடியோக்களை எக்கச்சக்கமான பார்வையாளர்களும் உள்ளனர்.
Also Read | "இத மாதிரி ஒரு சோகம் எதுவுமில்ல".. விராட் கோலியின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!!