"37 வருஷம் முன்னாடி நடந்த கொலையில் ஒரு கனெக்ட் இருக்கு".. 31 வயசு பெண்ணுக்கு வந்த போன் கால்.. "ஒரு நிமிஷம் பேச்சு மூச்சே வரல"
முகப்பு > செய்திகள் > உலகம்இளம் பெண் ஒருவருக்கு போலீசிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்த நிலையில், அதில் அவர்கள் சொன்ன காரணம் கேட்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "இத மாதிரி ஒரு சோகம் எதுவுமில்ல".. விராட் கோலியின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்தவர் Jacquleine Vadurro. இவர் தனது குடும்பத்தை குறித்து அறிந்து கொள்வதற்காக தன்னுடைய DNA சாம்பிளை நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்து அது பற்றி தகவல் அறிந்து கொள்ளவும் காத்திருந்துள்ளார்.
தனது குடும்பத்தினர் பற்றி ஏதாவது அறிந்து கொள்ள முடியும் என காத்திருந்த ஜாக்குலினுக்கு போலீசாரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
மேலும் அந்த அழைப்பில் அவர்கள் சொன்ன விஷயம் தான் ஜாக்குலினை ஒரு நிமிடம் ஆடிப் போக வைத்துள்ளது. அதாவது ஜாக்குலின் டி.என்.ஏ கடந்த 1986 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பெண் ஒருவருடன் தொடர்புடையதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 1986 ஆம் ஆண்டு உயிரிழந்த பெண்ணின் கொலை வழக்கு இத்தனை ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருக்கும் சூழலில் தற்போது ஜாக்குலின் அவரது டிஎன்ஏவை கொடுத்த சமயத்தில் அது ஒத்து போனதாகவும் தெரிய வந்துள்ளது.
முதலில் இது ஏதோ Scam என ஜாக்குலின் கருதி உள்ளார். ஆனால் பின்னர் தான் அது போலீஸ் தரப்பில் இருந்து வந்த அழைப்பு என்பதையும் உறுதியாகி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
இது தொடர்பாக மேலும் வெளியான தகவல்களின் படி, கடந்த 1986 ஆம் ஆண்டு உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் காணாமல் போனது பற்றி எந்தவித புகாரும் அந்த சமயத்தில் போலீசாரிடம் தெரிவிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த பெண் யார் என்பதே தொடர்ந்து தெரியாமல் இருந்து வந்த சூழலில் தான் ஜாக்குலின் DNA -வும் அந்த பெண்ணின் டிஎன்ஏவும் தொடர்பில் இருப்பது பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது.
அந்த வகையில் ஜாக்குலினின் தாய் வழியில் தொடர்புடையதாக அந்த உயிரிழந்த பெண் இருப்பார் என்றும் தகவல் தெரிவிக்கும் நிலையில், இதுவரை எதுவும் தெரியாத வழக்கில் ஒரு துப்பு கிடைத்தது போல தெரிகிறது. இதனால், மிக விரைவில் அந்த பெண் யார் என்பது குறித்து கண்டுபிடித்து அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்களையும் விரைவில் போலீசார் அறிந்து கொள்வார்கள் என்றும் நம்பப்படுகிறது.
Also Read | "சீனா பொண்ணு, மலேசியா பையன்".. காதல் நடுவே மலர்ந்த தமிழ் மொழி.. "ஜோடியா பேசுறத பாக்கணுமே"!!