என்னிடம் வராதீர்கள் தம்பிகளே.. லீவு குறித்து தமிழ்நாடு வெதர்மேனிடம் கேட்கும் 2K கிட்ஸ்.. பாவம்யா மனுஷன்..!😅
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியாளர்களும் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இதனிடையே விடுமுறையா இல்லையா என வெதர்மேனை நச்சரித்து வருகின்றனர் 2K கிட்ஸ்.

Also Read | "துணி காய வச்சிருக்கீங்களா?".. வித்தியாசமாக மழை அப்டேட் கொடுத்த வெதர்மேன்..!
இந்திய அளவில் தென்மேற்கு பருவ மழையின்போது பெரும்பாலான மாநிலங்கள் மழையை பெறும் என்றாலும் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின்போது மட்டுமே கணிசமான மழைப் பொழிவு இருக்கும். இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையானது கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி துவங்கியது.
பருவ காற்றின் காரணமாக திரள் மழை மேகங்கள் உருவாகி கனமழையை அளித்துக்கொண்டிருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று, சென்னையில் மழையின் தாக்கம் குறையலாம் என தகவல்கள் வெளியானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்குமா? என தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பல மாணவர்கள் வெதர்மேன் பிரதீப் ஜானிடம் இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கின்றனர்.
இதனையடுத்து இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் ஒரு பதிவை எழுதியிருந்தார். அதில்,"தயவு செய்து ஸ்கூல் லீவு பற்றி மீண்டும் கேட்காதீர்கள், அதற்கு பதில் சொல்லப் போவதில்லை, 2k ஸ்கூல் குழந்தைகள் ரொம்ப மோசம். கலெக்டர் வீடு முன்னாடி போய் காலைல 6 மணிக்கு டேங்கர் லாரி தண்ணீரை ஸ்ப்ரே பண்ணுங்க, அவர் உங்களுக்கு விடுமுறை கொடுப்பார்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதனுடன் மாணவர்களின் கமெண்டுகளையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவை அவர் எழுதி கொஞ்ச நேரத்திலேயே சென்னையில் இன்று (நவம்பர் 4) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமென மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இதை குறிப்பிட்டு வெதர்மேன்,"செய்தி வெளியான சந்தோஷத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை கிடைத்துவிட்டது. அதிர்ஷ்டசாலி குழந்தைகள். நன்றியில் பாதி எனக்கு வரவேண்டும்" என ஜாலியாக குறிப்பிட்டிருந்தார்.
Also Read | என்னப்பா Reels-ஆ.. எனக்கும் காட்டு.. பாகனிடம் அடம்பிடித்த யானை.. செம்ம கியூட்டான வீடியோ..!

மற்ற செய்திகள்
