"இப்ப எல்லாம் ஸ்கூலுக்கு போனா தான் FRESH'ஆ இருக்கு".. 9 மணி ஆனதும் டான்'னு என்ட்ரி கொடுக்கும் குரங்கு
முகப்பு > செய்திகள் > இந்தியாகல்வி என்பது நிச்சயம் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல், ஒருவரது வாழ்வில் தங்களின் தலை எழுத்தையே தீர்மானிக்கும் முக்கிய பங்கு கூட கல்விக்கு தான் உள்ளது.

தங்களுக்கு விருப்பமான துறையில் சாதிக்க நினைப்பவர்கள், அதற்கான கல்வியில் தலைசிறந்து விளங்கி, மென்மேலும் நிறைய விஷயங்களை கற்று, வாழ்நாளில் தங்களுக்கான லட்சியத்தை அடையவே முயல்வார்கள்.
அப்படிப்பட்ட கல்வி என்பது அனைவருக்குமே அடிப்படையான ஒன்றாக இருப்பதால், சிறு வயதில் இருந்தே தனது பள்ளிக்கூட கல்வி ஆரம்பித்து மெல்ல மெல்ல தங்களின் இலட்சியத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கல்வியின் முக்கியத்துவத்தை மனிதர்கள் மட்டுமில்லாமல் நானும் உணர்ந்து கொண்டேன் என்பது போல, குரங்கு செய்த செயல் தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் கடந்த ஒரு வார காலமாகவே வினோத சம்பவம் ஒன்று அரங்கேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் படி, தினந்தோறும் காலை 9 மணி அளவில், அந்த பள்ளிக்கூடத்தின் அருகே வலம் வரும் குரங்கு ஒன்று, சரியாக அந்த நேரத்தில் பள்ளிக்கூடம் வந்து மாணவர்களுடன் அமர்ந்து கல்வி பாடத்தினை கேட்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக காலையில் பள்ளிக்கு வரும் குரங்கு, பள்ளி முடிவது வரை அங்கே உள்ள வகுப்புகளில் மாணவர்களுடன் வலம் வந்து விட்டு பள்ளி முடிந்ததும் அங்கிருந்து கிளம்புவதை வழக்கமாக கடைபிடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், மாணவ மாணவிகள் என யாருக்கும் எந்தவித தொந்தரவையும் அந்த குரங்கு ஏற்படுத்துவது கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு, இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல விதமான கமெண்ட்டுகளை குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
