‘ஓட்டு இப்படியாயா போடுவீங்க?’.. வாக்குச் சாவடி அதிகாரிகளை ’தெறிக்கவிட்ட’.. ‘வேற லெவல்’ வாக்காளர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jan 02, 2020 04:04 PM
ஊராட்சி ஒன்றியங்களில் பதிவான உள்ளாட்சித் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணிகள் மும்முரமாக நடந்துள்ளன.
தபால் ஓட்டுகள் ஒரே கவரில் வாக்குச் சீட்டும், உறுதிமொழிக் கடிதமும் இருந்ததால் அந்த ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் தனித்தனி கவர்களில் வைத்திருக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, திண்டுக்கல் சீலப்பாடி மற்றும் செட்டிநாயக்கன்பட்டி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தபால் வாக்குகளை எண்ணும்போது, வாக்குச் சீட்டினை மட்டும் கிழித்து, அதாவது யாருக்கு ஓட்டு போடப்பட்டதோ, அந்த சீட்டில் இருந்து குறிப்பிட்ட சின்னத்தின் முத்திரையை மட்டும் கிழித்து மக்கள் வாக்காக செலுத்தியுள்ளனர்.
இதைப் பார்த்ததும் வாக்குச் சாவடி பொறுப்பூழியர்கள் நகைத்துள்ளனர். எனினும் இந்த ஓட்டுகளும் செல்லாத ஓட்டுகளாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் திரையில் வடிவேலு நடித்த தேர்தல் காட்சிகளை ஒத்திருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.