இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 17, 2019 10:19 AM
1. தர்பார் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் சொன்ன 3 ஆலோசனைகளில் அரசியல் வேண்டாம் என்ற ஒரு ஆலோசனையை மட்டும் பின்பற்ற முடியவில்லை என கூறினார். மேலும் படிக்க: அமிதாப்பின் ‘அட்வைஸில்’... அரசியல் குறித்து மட்டும்’... ‘ரஜினிகாந்த்’ பகிர்ந்த தகவல்!

2. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் 90 வயது மூதாட்டி கனகவல்லி.
3. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக, ஆய்வு செய்வதற்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
4. நிர்பயா வழக்கில், குற்றவாளி ஒருவரின் சீராய்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
6. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள் கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைப்பெற்றது.
7. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.58 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
8. குடிசையில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரும் திட்டத்தில், இதுவரை சுமார் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, உரிய பயனாளிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
9. உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில், பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காதலன் முன் ஜாமீன் பெற்றதால், 23 வயது இளம்பெண் காவல்நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10. சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
11. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்த மூதாட்டிகளில் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12. சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற போட்டியில், மேற்கிந்திய தீவு வீரர்கள் ஹெட்மயர் மற்றும் ஹோப் நன்றாக விளையாடியதாக, இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
13. பிரேசிலில் தீயணைப்பு துறை அலுவலகம் முன்பு கேட்பாரற்று நின்றிருந்த காருக்குள், 7 பேர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
