"வெயிலா? மழையா? புயலா?.. அடுத்த 3 நாளுக்கு இப்படித்தான் இருக்கும்!".. வானிலை ஆய்வு மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும்.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
Tags : #WEATHER #CLIMATE #METEOROLOGY #SUMMER #REGIONAL