‘நெறைய பேரோட கோரிக்கை’.. ‘ரேஷன் கார்டு’ இருக்கும் குடும்பங்களுக்கு சூப்பர் சான்ஸ்..! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 19, 2019 08:07 PM

சர்க்கரை மட்டும் வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Sugar ration cards can be converted into Rice ration cards

இதுகுறித்து அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட அறிக்கையில், பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 10,19,491 ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய அட்டைகளை அரிசி பெறக்கூடிய ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் கீழ்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றம் செய்துகொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்களுடன் தங்களுடைய ரேஷன் அட்டையின் நகலை இணைத்து இன்று (19.11.2019) முதல் நவம்பர் 26ம் தேதி வரை https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமோ சமர்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #TAMILNADU #RATIONCARDS #GOVERMENT