‘குழந்தை இல்ல, அதனால’... 'உருக்கமான கடிதம் எழுதிவிட்டு'... 'இளம்தம்பதி எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Aug 18, 2019 08:37 PM

குழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் ஒருவர், உருக்கமான கடிதம் ஒன்று எழுதிவைத்துவிட்டு, தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NIT Rourkela Professor, wife found dead inside house

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் ரூர்கேலாவில் உள்ள  என்.ஐ.டி. கல்லூரி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி சுமார் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.  இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபாலன் வீடு உட்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால்  சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடந்த சனிக்கிழமையன்று காலை, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்குள்ள குளியல் அறையில் ஜெயபாலனும், படுக்கை அறையில் அவரது மனைவி மாலினி கேசவன் இறந்து கிடந்தனர். இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேராசிரியர் ஜெயபாலன் வீட்டில் 4 பக்க அளவில் ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், “தங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில், நாங்கள் தற்கொலை செய்துகொண்டோம். தங்கள் பெற்றோர் இந்த முடிவுக்காக தங்களை மன்னிக்க வேண்டும் என்று எழுதியிருந்தது’ என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும்  இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று ரூர்கேலா எஸ்.பி சர்தாக் சாரங்கி தெரிவித்துள்ளார்.

Tags : #NIT #ODISHA #ROURKELA #PROFESSOR