தன் பாட்டுக்கு ‘நின்றுகொண்டிருந்த பேருந்து’.. இயக்கிச் சென்ற சிறுவர்களால் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 08, 2019 10:19 AM
சிறுவர்கள் சிலர் சேர்ந்து சாலையில் நின்றுகொண்டிருந்த பேருந்தை இயக்கிச் சென்றதால் உண்டான விபத்து சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், எம்எல்ஏக்கள் தங்கும் விடுதிக்கு போகும் சாலை மார்க்கமாக, எப்போதுமே சில தனியார் பேருந்துகளை நிறுத்தி வைத்திருப்பார்கள். பல தனியார் நிறுவனங்களுக்குச் செல்ல்லும் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளாகவோ அல்லது அரசு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகளாகவோ அவை இருக்கும்.
அவ்வகையில் மெட்ரோ ரயில்வே ஊழியர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஏறி விளையாண்டுக்கொண்டிருந்த சிறுவர்கள் சிலர், ஓட்டுநரின் இருக்கைகளில் அமர்ந்து என்ஜினின் ஸ்விட்ச்சை அழுத்திவிட்டதால் பேருந்து திடீரென ஆன் ஆகி இயங்கத் தொடங்கியுள்ளது.
ஆனால் இதனால் மேலும் குதூகலமான சிறுவர்கள் பேருந்தை ஓட்டிச் சென்று மின்வாரிய பெட்டியில் மோதிவிட்டு, பயத்தில் தப்பியோடியுள்ளனர். ஆனால் அச்சிறுவர்களை பிடித்துவிட்ட ஆட்டோ டிரைவர் அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தபோது, சாவி இல்லாமல் தானாக ஆன் ஆகும் வசதியுடன் அந்த பேருந்து இருந்ததாகவும், அதனால் என்ஜினின் மீது கை பட்டதும் பேருந்து இயங்கிவிட்டதாகவும் சிறுவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.