'இதெல்லாம் ரொம்ப 'ஓவர்'... நான் அனுமதிக்கவே மாட்டேன்...முதல்வர் எடுத்த அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Sep 12, 2019 12:36 PM
நாடு முழுவதும் பெரும் விவாத பொருளாக மாறி இருப்பது, மத்திய அரசின் திருத்தியமைக்கப்பட்ட மோட்டார் வாகன சட்டம் ஆகும். இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.

பெருகி வரும் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனிடையே இந்த சட்டம் பொதுமக்களின் மீது அதிக சுமையை சுமத்துவது போல உள்ளது, எனவே இந்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இந்த சட்டம் மக்களுக்கு பெரும் சுமையை அளிக்கும். அதோடு கடுமையான அபராதங்கள் விதிப்பதன் மூலம் இதற்கு ஒரு தீர்வை காண முடியாது. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே ‘சேஃப் டிரைவ் சேவ் லைஃப்’ என்ற பிரசாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் விபத்துகள் குறைந்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக ருத்தியமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
