‘கோலம்’ போட வெளியே வந்த மனைவி.. அதிர்ச்சியில் உறைந்த கணவர்.. மிரளவைத்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவள்ளுர் நகரை சேர்ந்தவர் ஆனந்தஜோதி. இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (40). இவர் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக இன்று அதிகாலை வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சித்ராவின் தலையில் கொடூர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி வெளியே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்ட கணவர் ஆனந்த ஜோதி கதறி அழுதுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மக்கள் நடமாட்டும் உள்ள பகுதியில் கோலம் போட வெளியே வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவ அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகைக்காக நடந்த கொலையா? இல்லை முன்பகை காரணமாக நடந்த கொலையா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
