'ஏற்கெனவே 3 மனைவி, 4 குழந்தைங்க'... 'ஒரேயொரு விக்கை வெச்சு பதறவைத்த நபர்'... 'காணாமப்போன இளம்பெண்ண தேடினப்போ'... 'அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் போலி பேஸ்புக் கணக்கு மூலம் இளம்பெண்ணை ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கடந்த 3ஆம் தேதி இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பல குழுக்களாக பிரிந்து அந்தப் பெண்ணை தேடியபோது, அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் அப்துல்லா என்பவருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் விசாரித்ததில் மீரட்டை சேர்ந்தவர் அப்துல்லா (42) என்ற அந்த நபருக்கு ஏற்கெனவே திருமணமாகி 3 மனைவிகள் மற்றும் 4 குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர் பேஸ்புக்கில் அமன் சவுத்ரி என்ற பெயரில் புதிய கணக்கை தொடங்கி, தன்னுடைய வயதைக் குறைத்துக் காண்பிக்க வேண்டி விக் வைத்து புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டுள்ளார்.
அப்போது தான் காணாமல் போன இளம்பெண்ணுக்கு அவர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாரை அப்துல்லாவை கைது செய்துள்ளனர்.