'என்ன மன்னிச்சிடு'... 'திடீரென குண்டை தூக்கி போட்ட இளைஞர்'...'காதலிச்ச நேரம் இனிக்குது, இப்போ கசக்குதா'... காதலி வச்ச செக்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நான்கு வருடமாகக் காதலித்து வந்த நிலையில், திடீரென திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்குக் காதலி வைத்த செக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சந்து தெருவைச் சேர்ந்தவர் ராம். 27 வயதான ராம், நகை செய்யும் தொழிலைச் செய்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் புதுக்கோட்டை இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் ஜனனி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நண்பர்களாக இருவரும் பழகிய நிலையில், நாட்கள் செல்ல செல்ல இருவருக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 4 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளார்கள். ஜோடியாக இருவரும் நண்பர்கள் வீட்டிற்குச் செல்வதும், அங்குச் சென்று தங்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் திடீரென ராம் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தனது வீட்டில் தனக்குப் பெண் பார்ப்பதாகவும், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ஜனனி அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர் ராமிடம் பேசி பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே ராமின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதனால் இதற்கு மேல் பொறுமையாக இருந்தால் ஒன்றும் நடக்காது என முடிவு செய்த ஜனனி, நடந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டைக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த நேரம் ராமின் காதல் விவகாரம் ராமிற்குப் பார்க்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணின் வீட்டாரும் திருமணத்தை நிறுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து ஜனனி அளித்த புகாரின் அடிப்படையில் ராமை விசாரிக்க அவரை காவல்நிலையம் அழைத்துள்ளார்கள். ஆனால் ராம் காவல்நிலையத்திற்குச் செல்லவில்லை. இதையடுத்து அந்த புகார் விசாரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. இதனால் ஜனனி திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ராம் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனைத் தெரிந்து கொண்ட ராம், காவல்நிலையத்திலிருந்து நைசாக வெளியில் செல்ல முயன்றுள்ளார். இதைக் கவனித்த ஜனனி, ராமைப் பிடித்து மீண்டும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். ஜனனியிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு எப்ஐஆர் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் நண்பர்களின் வீடுகளிலும் காவல்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஜனனி, '' தனக்குத் தண்டனை கிடைத்தாலும் பரவா இல்லை. உன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ராம் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் தன்னை ராமுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் உரியத் தண்டனை பெற்றுத்தர காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
