'வெகேஷனுக்கு சென்று திரும்பி வந்த குடும்பம்!'.. குழந்தைகளின் 'படுக்கை' அறையில் கண்ட 'அதிர்ச்சி' காட்சி!.. அன்று 'இரவே' கணவர் கண்ட 'உறைய வைத்த' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Sep 16, 2020 04:11 PM

கனடாவில் சுற்றுலாவுக்கு நீண்டகாலம் சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பிய குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் Allison Greenway என்பரின் குடும்பத்தினர் மூன்று வாரங்கள் உறவினரின் வீட்டிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பியபோது வீடு பூட்டப் படாமல் இருப்பது கண்டு குழப்பமடைந்துள்ளனர். வீட்டின் உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருப்பதற்காக யாரோ ஜன்னல்கள் அனைத்த்திலும் போர்வைகள் போட்டு, அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

Stranger Breaks home and lived during family went to vacation

அத்துடன் வீட்டில் வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லாமல் நகை முதலான விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருந்ததுடன், வீடே குப்பை கூளமாக கிடந்துள்ளது. அதிலும் தங்கள் குழந்தைகளின் படுக்கைகளை யாரோ பயன்படுத்தியது போல இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து வீட்டை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்திய அந்த குடும்பம் எனினும் பயத்தின் காரணமாக தற்காலிகமாக ஹோட்டல் ஒன்றில் தங்கி கொள்ளலாம் என்று முடிவெடுத்து ஹோட்டலில் தங்கி இருந்தது.

அப்போது இரவு 8 மணி அளவில் ஒரு நடை போய் வீட்டை பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டுள்ளார் Allison Greenwayன் கணவர். அப்போது அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. ஏனென்றால் வீட்டுக்குள் யாரோ நடமாடுவதை அவர் கண்டுள்ளார். வீட்டு உரிமையாளர்கள் திரும்பி வந்த பிறகும் யாரோ மீண்டும் வீட்டுக்குள் வந்ததை அறிந்த Allison Greenwayன் கணவர் போலீசார் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் மீண்டும் வீட்டுக்கு வர, வீட்டுக்குள் மின் விளக்கு எரிவதையும் நடமாடுவதையும் பார்த்துள்ளார். பின்னர் வீட்டு கதவ தட்டியிருக்கிறார்கள். ஆனால் யாரும் பதில் சொல்லாததால் வேறுவழியின்றி வீட்டுக்குள் நுழைந்த போலீசார் குழந்தைகளின் துணிமணிகள் வைக்கும் அலமாரியில் ஒரு ஆள் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

Stranger Breaks home and lived during family went to vacation

போலீஸ் நாயிடம் கடி வாங்கிய பின் கைது செய்யப்பட்ட அந்த மர்ம, நபர் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்ட 40 வயதான Sean Kulai என்பது தெரியவந்தது. பின்னர் வீட்டில் சிசிடிவி கேமரா ஒன்றை நிறுவுதல் மற்றும் களவுபோன மற்றும் நாசமாக்கப்பட்ட பொருட்களை மீண்டும் வாங்குவதற்காக பணம் சேகரித்தல் உள்ளிட்ட முயற்சிகளில்Allison Greenway-ன் குடும்ப நண்பர்கள் இறங்கியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Stranger Breaks home and lived during family went to vacation | World News.