தமிழ்நாட்ல பொண்ணுங்க இருந்தும், ஏன் விஜய்க்கு வெளியூர் பொண்ணு பாத்தாங்க..? - ஷோபா சந்திரசேகர் சொன்ன பதில்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Mar 10, 2023 10:12 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் இதற்கு முன்பு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்திலும் விஜய் நடித்து வருகிறார்.

Shoba Chandrasekhar about her niece sangeetha and vijay marriage

                                                    Images are subject to © copyright to their respective owners

கலைக்குடும்பத்தில் இருந்து வந்த நடிகர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராக உள்ளார். அதே போல, விஜய்யின் தாயாரும் பாடகியாக வலம் வருகிறார். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாயார், ஷோபா சந்திரசேகர், தற்போது Behindwoods சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்தார். பிரபல நடிகையும், இயக்குநரும், சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நேர்காணல் செய்தார். இதில், தனது கணவர் S.A. சந்திரசேகர் மற்றும் மகன் விஜய் குறித்தும், தனது குடும்பத்தினர் குறித்தும் என பல சுவாரஸ்ய பதில்களை ஷோபா சந்திரசேகர் பகிர்ந்து கொண்டார்.

Shoba Chandrasekhar about her niece sangeetha and vijay marriage

அப்போது அவரிடம், "தமிழ்நாட்டில் இல்லாத பெண்கள் இல்லை, ஆனா உங்க மகனுக்கு வெளியூர்ல இருந்து ஏன் பொண்ணு தேடி கல்யாணம் பண்ணி வச்சீங்க?" என்ற கேள்வியை இயக்குனர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முன் வைத்தார்.

இதற்கு பதில் அளித்த ஷோபா சந்திரசேகர், "அப்படி இல்ல. அது எதுவுமே பிளான் எல்லாம் கிடையாது. தீபா, கீதான்னு சொல்லிட்டு அவங்க ரெண்டு பேருமே சகோதரிங்க. அவங்க சும்மா ரெண்டு பேரும் 96 -ல விஜய்யை பாக்குறதுக்காக வந்தாங்க. காலமெல்லாம் காத்திருப்பேன் படத்துல ஃபிலிம் சிட்டில விஜய் ஷூட்டிங்ல இருந்தாரு. விஜய்யை பாக்கணும்னு லண்டனில் இருந்து புறப்பட்டு வந்தாங்க. அங்க போய் விஜய்யை பார்த்ததுமே நேரா அப்பா, அம்மா வீட்டில் இருப்பாங்க போய் பாருங்கன்னு சொன்னதுக்கப்புறம் கேஷ்வலா எங்க வீட்டுக்கு வந்தாங்க. அதுக்கப்புறம் திருப்பி 97 -ல வந்தாங்க.

Shoba Chandrasekhar about her niece sangeetha and vijay marriage

Images are subject to © copyright to their respective owners

வந்த உடனேயே எங்க கணவருக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. அப்புறம் அவங்களே கேட்டு நடந்த கல்யாணம் தான் அது. அங்க தான் பாக்கணும், இங்க தான் பாக்கணும்ன்னு இல்ல. எல்லாம் கடவுளோட சித்தம் தான்" என தெரிவித்திருந்தார்.

Tags : #VIJAY #SHOBA CHANDRASEKHAR #SANGEETHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shoba Chandrasekhar about her niece sangeetha and vijay marriage | Tamil Nadu News.