BAAKIYALAKSHMI : "நமக்கு தெரியாதத வெச்சு அடிப்பாங்க.. இடம் கொடுக்க கூடாது" .. ராதிகாவிடம் இங்லீஷில் பேசிய பாக்யா.! மாஸ்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Mar 10, 2023 09:16 PM

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் பாக்கியலட்சுமி சீரியலில் கணவர் கோபி தன்னை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை 2வது திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரது வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து வாங்கி வருகிறார் பாக்கியலட்சுமி.

Baakya Speaking in English to Radhika Baakiyalakshmi Update

Also Read | "உன் போன்ல இவ்ளோ Apps இருக்கு..".. மூச்சுவிடாமல் லிஸ்ட் போட்ட Love Today பிரதீப்.! புல்லரிக்கும் BTS வீடியோ  

இன்னொரு பக்கம் எழிலுக்கு திருமணம் ஆகி, அமிர்தாவும் நிலாவும் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பாக இருக்க கற்றுக்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் அமிர்தா மீது எரிந்த விழுந்த ஈஸ்வரி பாட்டியை தற்போது அமிர்தா சமாளிக்கக் கற்றுக்கொண்டுவிட்டார். அமிர்தாவின் குழந்தை நிலாவும் செழியன், ஜெனி என எல்லாருடனும் இயல்பாகி விட்டார். 

முன்னதாக ராதிகா வேலை பார்க்கும் அலுவலகத்தில் சமையல் காண்ட்ராக்ட் வாங்க போன பாக்கியலட்சுமியிடம் ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்டு ராதிகா திணறடித்தார்.  முதலில் தட்டு தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொன்ன பாக்கியலட்சுமி பிறகு ராதிகாவிடம், “பிறக்கும் பொழுதே யாரும் எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்வதில்லை. தேவை என்று வரும்போதுதான் கற்றுக் கொள்கிறார்கள். 

Baakya Speaking in English to Radhika Baakiyalakshmi Update

Image Credit : vijay television

படிப்புக்கும் நாகரீகத்திற்கும் சம்பந்தம் இருக்கு என்று சொல்கிறார்கள். ஆனால் சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை. அதுபோன்றுதான் இதுவும்” என்று பதிலடியாக பேசியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பாக்யா அதிரடி முடிவாக, ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகுப்பில் இணைந்துள்ளார். பிஸினஸில் நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்பதால், தான் சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என குறிப்பிட்டு ஆங்கில வகுப்பில் சேர்ந்தார் பாக்யா.

Baakya Speaking in English to Radhika Baakiyalakshmi Update

Image Credit : vijay television

ஆனால் உண்மையில் அதில் ராதிகாவுக்கான பதிலடியும் இருக்கிறது. தற்போது 6 மாதம் இனி இந்த ஆங்கில வகுப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் பாக்யா. இதற்கென பல தடைகளை தாண்டி இந்த வகுப்புக்கு தினமும் காலையில் செல்ல வேண்டும். இவருடன் இந்த வகுப்பில் நடிகர் ரஞ்சித்தும் தற்போது படிக்கிறார்.

Baakya Speaking in English to Radhika Baakiyalakshmi Update

Image Credit : vijay television

இந்நிலையில் தற்போது ராதிகாவின் அலுவகத்தில் முதல் நாள் சமையல் செய்து அனைவருக்கும் சப்ளை பண்ணும் பாக்யா, எழில், இனியா, ஜெனி மற்றும் அமிர்தாவின் உதவியுடன் ராதிகாவிடம் போய் ஆங்கிலத்தில் பேச சில வார்த்தைகள் கற்றுக்கொள்ளச் சொல்லி கேட்கிறார். அதன்படி ராதிகாவிடம் சென்று, “எங்கள் கேண்டீன் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி, இன்றிலுருந்து சுவையான உணவை இங்கு சாப்பிடுவீர்கள்” என பாக்யா மாஸாக பேசுகிறார்.

Also Read | இயக்குநரான பின் விஜய் பட நடிகை நடிக்கும் பீஷ்ம பருவம்! ஹீரோ இவரா..?

Tags : #BAAKIYALAKSHMI SERIAL #BAAKIYALAKSHMI PROMO #BAAKIYALAKSHMI SERIAL TODAY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Baakya Speaking in English to Radhika Baakiyalakshmi Update | Tamil Nadu News.