LEO விமான பயணத்தில் விஜய்.. கூட யார் இருக்காங்கன்னு பாருங்க.. வைரல் PIC..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Feb 26, 2023 11:05 PM

வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் LEO படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Actor Vijay and actress Trisha in Flight pic Goes Viral

                         Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது. S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Actor Vijay and actress Trisha in Flight pic Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Actor Vijay and actress Trisha in Flight pic Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Actor Vijay and actress Trisha in Flight pic Goes Viral

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் விமானத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக லியோ படக்குழு மொத்தமும் ஒரே விமானத்தில் காஷ்மீருக்கு பறந்தது. அதில் விஜய் அருகே த்ரிஷா அமர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தையும் குருவி படத்தில் இருவரும் விமான பயணம் செய்யும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் மீம்களை பறக்கவிட்டனர். இந்த சூழ்நிலையில் இந்த புகைப்பபடமும் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #LEO #VIJAY #TRISHA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Vijay and actress Trisha in Flight pic Goes Viral | Tamil Nadu News.