‘தெறி ஹிட்’!.. போட்டோ வெளியான 24 மணிநேரத்துக்குள்ள இப்படியொரு ரெக்கார்ட்டா.. மரண ‘மாஸ்’ காட்டிய ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடிகர் விஜய்யும், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும் சந்தித்த போட்டோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இதனை அடுத்து சமீபத்தில் சென்னை ஈசிஆர் பகுதியில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ளார். அங்கு புறப்படுவதற்கு முன்னதாக கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதே ஸ்டூடியோவில் விஜய்யும் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார்.
இதனால் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. விஜய்யும், தோனியும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிஎஸ்கே அணியும் தங்களது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
அதில் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கு அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். அதேபோல் ட்விட்டரிலும் 1 லட்சம் லைக்ஸை நெருங்கி வருகிறது. போட்டோ வெளியாகி 24 மணிநேரத்துக்குள் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Master and the blaster! 🆒😎#WhistlePodu #Yellove 🦁💛 @msdhoni @actorvijay pic.twitter.com/3G2MMVfw5y
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 12, 2021

மற்ற செய்திகள்
