'நடிகர் விஜய்யை சந்திக்க... குடும்பத்தோடு வந்த 'விஜய் மக்கள் இயக்க' முன்னாள் நிர்வாகி'!.. 'காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்ற போலீஸ்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்திக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க முன்னாள் நிர்வாகி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் நடிகர் விஜய் வசித்து வருகிறார். அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணை செயலாளராக குமார் என்பவர் பொறுப்பு வகித்து வந்தார். மேலும், பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்திலும் வேலை செய்து வந்த இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், குமார் தனது குடும்பத்துடன் சென்று, விஜய்யை சந்திக்க வேண்டும் எனக்கூறி, அவரது வீட்டின் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள், விஜய் யாரையும் சந்திக்க முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பின்னரும் வீட்டின் முன்பு அவர் நின்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, நீலாங்கரை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், அங்கு சென்ற நீலாங்கரை போலீசார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில், சம்பள பாக்கியை பெறுவதற்காக விஜய்யை சந்திக்க வந்ததாக அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதனால், விஜய் வீட்டின் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
