மாஸ்டர் பட தயாரிப்பாளர் ‘சேவியர் பிரிட்டோ’ வீட்டில் ரெய்டு ஏன்..? வெளியான பரபர தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய்யின் உறவினரும், மாஸ்டர் பட தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி நடித்து இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோ தயாரித்தார்.
இந்த நிலையில் சேவியர் பிரிட்டோ தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முதல் செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர். அதில் சீன நிறுவனமான ஜியோமி, ஓப்போ (Xiaomi, Oppo) ஆகிய நிறுவனங்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதில் செல்போன் உதிரிபாகங்கள் ஏற்றுமதி, இறக்குமதி கையாள்வதில் சேவியர் பிரிட்டோ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதனால் அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
சென்னை அடையாறில் உள்ள சேவியர் பிரிட்டோவின் இல்லத்திலும் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திடீர் சோதனைக்கான காரணம் என்ன என தெரியவில்லை. சோதனை முடிந்தபின் வருமான வரித்துறையினரிடம் இருந்து இதுதொடர்பான தகவல் வெளியாகும் என தெரிகிறது.

மற்ற செய்திகள்
