"கூட்டுக்குடும்பம்தான் நம்ம கலாச்சாரம்".. விஜய் நடித்த வாரிசு படத்துக்கு குழந்தைகள் & முதியோரை அழைத்துச்சென்ற தனியார் பள்ளி..!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 30, 2023 02:52 PM

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாகிறது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

School Taken children and Old people to Varisu movie

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சரவணன் நீங்க மாட்டிகிட்டீங்க..".. பரட்டை & சித்தப்பு கேரக்டர் பத்தி ரஜினி அடித்த கமெண்ட்..

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். சகோதரர்கள், பெற்றோர், ரஷ்மிகாவுடன் காதல், காமெடி நண்பன் யோகி பாபு என ஜனரஞ்சக களத்தில் கலர்ஃபுல்லாக வந்துள்ள இப்படத்தின் டிரெய்லரிலேயே, "குடும்பம்னா குறை இருக்கும்தான்.. ஆனா நமக்குனு இருக்குறது ஒரே ஒரு குடும்பம்தான்" என‌ விஜய் வசனம் பேசியிருப்பார். இதேபோல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என ரஷ்மிகாவிடம் ஒரு காட்சியில் விஜய் பேசும் வசனம் வைரலானது.

School Taken children and Old people to Varisu movie

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களை 'வாரிசு' படத்திற்கு யூரோகிட்ஸ் நர்சரி & ப்ரைமரி பள்ளியின் நிர்வாகம் அழைத்துச் சென்றது.

இதுகுறித்து பேசிய பெரியோர்கள் சிலர், “பெற்றோர் மற்றும் குடும்பத்தின் மூத்த உறவுகள் பற்றி புரியவேண்டும் என்பதற்காக நாங்கள் பேரன் பேத்தி வயதுள்ள பிள்ளைகளுடன் படம் பார்க்க வந்திருக்கிறோம்” என்றனர்.

School Taken children and Old people to Varisu movie

Images are subject to © copyright to their respective owners.

இதேபோல் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் கூறும்போது, “கூட்டுக்குடும்பம் தமிழனின் வாழ்வியலுடன் சேர்ந்த கலாச்சாரம், இப்போது அந்த மரபு குறைந்து வரும் சூழலில்,  பெரியோர்களின் ஆசீர்வாதம் வேண்டும் என்பதை புரிந்துகொண்டு குடும்ப உறவுகளின் மேன்மையை உணரவும், கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தை குழந்தைகள் அறிந்துகொள்ளவும், பள்ளி தாளாளரின் விருப்பத்திக்கிணங்க, ஆதரவற்ற பெரியோர்களையும் எங்களுடன் இந்த நிகழ்வில் அழைத்துக்கொண்டு வாரிசு படத்துக்கு வந்துள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளனர்.

Also Read | “அம்மா இறந்ததை ருக்குவிடம் சொல்ல முடியாம அழும் குட்டி இப்போது பார்த்தாலும் கண்கலங்க வெச்சிடுவார்” - ‘துள்ளாத மனமும் துள்ளும்’ வந்து 24 வருஷம் ஆச்சா?

Tags : #VARISU #VIJAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. School Taken children and Old people to Varisu movie | Tamil Nadu News.