நீலாங்கரை வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் வந்து ஓட்டு போட்ட நடிகர் விஜய்.. சூழ்ந்த ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (19.02.2022) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் தங்களது வாக்கை செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய், சிவப்பு நிற காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தார்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வந்தன. தற்போது விஜய்,சிவப்பு நிற காரில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்தது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
