"தியேட்டர்ல பாத்த முதல் விஜய் படம் பீஸ்ட்".. HALAMATHI HABIBO அர்த்தம் இது தான்.. நீயா நானா வைரல் சூடான் இளைஞர் EXCLUSIVE!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த நீயா நானா நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில் கலந்து கொண்ட சூடான் நாட்டை சேர்ந்த இளைஞர், அதிகம் வைரலாகி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒரு பக்கம் சினிமா நடிகர்களின் ரசிகர்களும் மறுபக்கம் ரசிகர்கள் மேல் கோபம் கொண்ட பொதுமக்கள் என இரண்டு தலைப்பில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டிருந்தது.
![Neeya Naana Viral Sudan Vijay fan about beast exclusive Neeya Naana Viral Sudan Vijay fan about beast exclusive](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/neeya-naana-viral-sudan-vijay-fan-about-beast-exclusive.jpg)
Images are subject to © copyright to their respective owners
இதில் சினிமா ரசிகர்கள் பக்கம் சூடான் நாட்டை சேர்ந்த ஜோசப் ஜேம்ஸ் உடோ அலி என்ற இளைஞர் கலந்து கொண்டார். சினிமா பற்றி பேசிய ஜோசப், சினிமா எல்லோரும் ஒன்று கூடும் இடமாக உள்ளதாகவும் அதில் சந்தோஷமும், கொண்டாட்டமும் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தான் அதிகமான தமிழ் படங்களை பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட ஜோசப், முதல் நாள் முதல் ஷோ திரையரங்கில் பார்ப்பது பிடிக்கும் என்று கூறினார்.
அதே போல, தமிழ் நடிகர் விஜய் தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்றும் அவர் குறிப்பிட்டு அவரது ஃபோனின் பின் பக்கம் விஜய் படத்தை வைத்துள்ளதையும் நிகழ்ச்சியில் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான வீடியோக்கள் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்த நிலையில், இளைஞர் ஜோசப் ஜேம்ஸ் உடோ அலி, Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது நடிகர் விஜய்யின் பிரபல வசனங்களை ஜோசப் ஜேம்ஸ் பேசி இருந்தார். விஜய் பெயரிலும் தனது பெயரிலும் ஜோசப் இருப்பதை குறிப்பிட்டு காட்டிய சூடான் இளைஞர், விஜய்யை போல தானும் சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்து வருவதையும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தமிழ் சினிமா பற்றியும், திரை அரங்குகளில் திரைப்படம் பார்ப்பது பற்றியும் ஜோசப் ஜேம்ஸ் நிறைய விஷயங்களை பேசி இருந்தார்.
மேலும் தான் திரை அரங்கில் பார்த்த முதல் விஜய் திரைப்படம் பீஸ்ட் தான் என்றும், அதில் வரும் பாடல்கள் மற்றும் நடனம் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அப்போது அரபிக்குத்து பாடலில் வரும் ஹலமத்தி ஹபிபோ என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதையும் ஜோசப் ஜேம்ஸ் பகிர்ந்து கொண்டார்.
"நான் இந்தியாவிற்கு வந்த பிறகு பார்த்த முதல் திரைப்படம் பீஸ்ட் தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் பாடல் மற்றும் நடனம் பிடித்திருந்தது. எனது ஃபேவரைட் பாடல் ஹலமத்தி ஹபிபோ தான். அதற்கு அரபியின் அர்த்தம் என்னவென்றால், நான் என் காதலியை பற்றி கனவு காண்கிறேன் என்பது தான்" என ஜோசப் ஜேம்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)