‘தல-தளபதி’!.. அதகளம், ரணகளம் ஆன சோஷியல் மீடியா.. இந்த திடீர் சந்திப்பின் ‘பின்னணி’ இதுதான்.. ‘BEAST MODE’-ல் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அதேபோல் இயக்குநர் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய்யின் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார்.
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. இதனை அடுத்து, சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ஈசிஆர் பகுதியில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது மீண்டும் கோகுலம் ஸ்டூடியோவில் நடந்துவரும் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சமீபத்தில் சென்னை வந்துள்ளார். இங்கிருந்து சக வீரர்களுடன் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார்.
அதற்கு முன்னதாக சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் விளம்பர படப்பிடிப்புக்காக தோனி கலந்து கொண்டுள்ளார். இந்த சமயத்தில், விஜய்யும் தோனியும் சந்தித்து உற்சாகமுடன் உரையாடினர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் போட்டி ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனியும், நடிகர் விஜய்யும் சந்திந்தனர். அப்போது அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
