"பட்டதாரியா நீங்கள்?"... "எஸ்பிஐ வங்கியில் 8,000 வேலை வாய்ப்புகள்!"... "விவரங்கள் உள்ளே"...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manishankar | Jan 13, 2020 03:11 PM
நாடு முழுவதும், மாநிலங்கள் வாரியாக காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
இந்தியாவில் அதிகக் கிளைகளுடன் இயங்கிவரும் மிகப்பெரும் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 8,000-த்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கிறது.
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வெழுதிவிட்டு, முடிவுக்காகக் காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் www.sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஜனவரி 26-ம் தேதிக்குள் அனுப்பிவைக்கப்பட வேண்டும். முதல் நிலை தேர்வு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெறும். ஏப்ரல் 19, 2020 அன்று மெயின் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.