புது வருடத்திலும் 'தீராத' சோகம்... 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்?

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்

By Manjula | Jan 02, 2020 06:10 PM

ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக கடந்த 2019-ஆண்டு லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். ஆட்டோமொபைல் மட்டுமின்றி ஐடி நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள், வங்கிகள் என பல்வேறு துறைகளிலும் தேக்கநிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனங்களும் கொத்துக்கொத்தாக ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வேலையில்லா நாட்களை அவ்வப்போது அறிவித்தன.

Bosch\'s India to cut workforce by a couple of thousands

இதனால் 2019-ம் ஆண்டு முழுவதும் பணியாளர்கள் திக்திக் மனநிலையுடனேயே வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. எனினும் 2020-ம் ஆண்டு ஒரு நல்ல நிலையை அனைவருக்கும் அளிக்கும் என்ற நம்பிக்கை அனைவரது மத்தியிலும் நிலவியது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்பதுபோல, ஆண்டின் தொடக்கத்திலேயே ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப போஷ் (Bosch) நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக உலகெங்கும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சுமார் 80 ஆயிரம் ஊழியர்களை வரும் ஆண்டுகளில் வீட்டுக்கு அனுப்பலாம் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியது. அதனை உண்மையாக்கும் வகையில் ஜெர்மனியை தலைமையிடமாக் கொண்டு இயங்கும், உலகின் மிகப்பெரிய வாகன உதிரி பாகங்கள் நிறுவனமான போஷ் வரும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இந்திய நிர்வாகியான சவுமித்ரா பட்டாச்சார்யா வொயிட் காலர் ஜாப் பணியில் 10% பேரும், ப்ளூ காலர் ஜாப் பணியில் இருந்து அதிகளவிலான பணியாளர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார். வரும் நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #JOBS