"இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் அரசு வேலை!"... "அப்ளை பண்ணீட்டீங்களா?"...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 10, 2020 12:18 PM

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான TANGEDCO, பொறியாளர் பணிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது.

TNEB 2020 Job Notification for Engineering graduates

இளநிலை உதவியாளர் (கணக்கு), கணக்கீட்டாளர், உதவிப் பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), உதவிப் பொறியாளர் (மெக்கானிக்கல்), உதவிப் பொறியாளர் (சிவில்) முதலிய பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. TANGEDCOவின் இந்த அறிவிப்பில் மொத்தம்  2,400 காலியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைன் மூலம் விண்ணப்பிலாம்.

தேர்வுக்கட்டணத்தைப் பொறுத்தவரை எஸ்.சி / எஸ்.டி பிரிவினர், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 500 கட்டணமும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொது பிரிவினர் முதலியோருக்கு ரூ.1,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் தொடங்கும் நாள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி, தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை, தகுதித் தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு TANGEDCO இணையதளத்தில் பார்க்கலாம்.

Tags : #JOBS #TNEB #GRADUATES #EMPLOYMENT