'சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சி அளித்த...' 'பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்க...' சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தலைமை காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடையதாக காவல் ஆய்வாரள் ஸ்ரீதார், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தந்தை, மகன் மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த தலைமைக் காவலர் ரேவதியிடம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவரின் கணவர் சந்தோசம், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தனது மனைவி ரேவதி வாக்குமூலம் அளித்த நாளிலிருந்து சாப்பிடவில்லை. கடும் மனஉளைச்சலில் உள்ளார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள் வருவதாகவும், பாதுகாப்பு கருதி அதை எடுக்கவில்லை. எனது மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மற்ற செய்திகள்
