'23 வருசத்துக்கு முன்னாடி பற்ற வைத்த நெருப்பு'... 'எஸ்பி'யின் வாட்ஸ்அப்'பிற்கு வந்த மெசேஜ்'... கொத்தாக சிக்கிய காவலர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 02, 2020 10:55 AM

23 வருடங்களுக்கு முன்பு காவல்துறை பணியில் சேர்வதற்காகக் காவலர் ஒருவர் செய்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Head Constable held for using fake certificates to join Police force

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ந்தேதி அபிராமம் காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது மதுரையில் தலைமைக் காவலராகப் பணி செய்து வரும் நிலையில், இவர் பணியில் சேரும் போது போலியான சாதி சான்றிதழ் மற்றும் தந்தை பெயரை மாற்றி போலியான ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமாரின் பிரத்தியேக எண்ணிற்குப் புகார் ஒன்று வந்தது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி வருண் குமார் உத்தரவின் பேரில், காவலர் முருகனிடம் நடத்திய விசாரணையில் மோசடி உண்மையென்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண் குமார் பதவி ஏற்கும் போது, பொது மக்கள்  எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என அவர் அறிவித்திருந்த அவரின் பிரத்தியேக எண்  (9489919722) பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதது. அதன் மூலம் பல புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், காவலர் மீதும் தற்போது விசாரணை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Head Constable held for using fake certificates to join Police force | Tamil Nadu News.