அஞ்சு மரக்கன்றுகளை நட்டா, அரஸ்ட் வாரண்ட் கேன்சல்.. வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Mar 11, 2019 08:31 PM
இந்தியா முழுவதையும் அதிரவைக்கும் வகையில் பாலியல் குறறங்கள் பெருகி வருகின்றன.
பெண் பிள்ளைகளை பெற்ற மக்களும், பெண்களை மதிப்போரும் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் கைதாகி, பின்னர் தனது செல்வாக்கினால் உடனடியாக ஜாமினில் வெளிவந்தவர் ராஜூ.
ஆனால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அதற்காக கைதான வழக்கில், ஜாமினில் வெளிவந்து 6 மாதங்கள் ஆகியும், தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஒழுங்காய் நீதிமன்றத்தில் ராஜூ ஆஜராகவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அரசு தரப்பு, நீதிமன்ற உத்தரவுக்கு கீழ் படியாத ராஜூவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது.
இந்த பிடிவாரண்ட்டை ரத்துசெய்யக்கோரி ராஜூ மீண்டும் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை அளித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இத்தகைய கொடுமையான செயலைச் செய்த ராஜூவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது பிடிவாரண்ட்டை ரத்து செய்து, அதற்கு நிபந்தனையாக 5 மரக்கன்றுகளை மட்டும் நடச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.
உறுதியாக இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பு அல்ல எனினும், சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு இத்தகைய சாதாரணமான நிபந்தனைகளுடன் பிடிவாரண்ட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றத்தின் செயல் விவாதப் பொருளாக மாறியுள்ளது.