1,00,000 'மிங்க்' விலங்குகளுக்கு கொரோனா.... "எல்லாத்தையும் கொன்னுருங்க, வேற வழியே இல்ல"... ஷாக்கிங் முடிவு எடுத்த நாடு!!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் கடந்த சில மாதங்களாக கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.
தொடக்கத்தில் மனிதர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று அதிகமாக பரவி வந்த நிலையில், சில நாடுகளில் சில விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விலங்குகள் மனிதர்களை போல அல்லாமல் வெவ்வேறு இடங்களுக்கு சென்று கொண்டிருக்கும் என்பதால் விலங்குகளுக்கு தொற்று இருப்பது என்பது மிகவும் ஆபத்தான விஷயமாகும்.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கில் உள்ள ஆரகான் பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் இருந்த சுமார் 1 லட்சம் மிங்க் விலங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் பதற்றத்தை உருவாக்கியது. விலையுயர்ந்த ரோமம் எடுப்பதற்காக வேண்டி இந்த மிங்க் வகை விலங்குகளை அங்குள்ள பண்ணைகளில் வளர்த்தி வருகின்றனர். கடந்த மே மாதம், ஒரு பண்ணையாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அந்த பண்ணை உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரிந்த ஆறு தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, அந்த பண்ணையில் இருந்த 1 லட்சம் மிங்க் விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் சுமார் 92 ஆயிரம் மிங்க் விலங்குகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக, அந்த பண்ணையிலுள்ள அனைத்து மிங்க் விலங்குகளையும் கொல்ல வேண்டுமென அந்நாட்டு சுகாதாரத்துறை உத்தரவு வெளியிட்டுள்ளது. அதற்கான இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட பண்ணை நிறுவனத்துக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
மிங்க் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதை தடுக்கவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரகான் மாகாண வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.