"யாருடன் நெருக்கமாக இருக்கிறாய்?".. சந்தேகத்தால் 'ஷூட்டிங்' ஸ்பாட்டிற்கே சென்ற உளவு பார்த்து வந்த ஹேம்நாத்? .. விசாரணையில் வெளியான 'பகீர்' தகவல்!.. பிரிவு 306-ன் கீழ் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சின்னத்திரை நடிகை சித்ரா அண்மையில் சென்னை நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல்களை அடுத்து போலீசார் சித்ராவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்னொருபுறம் சித்ராவின் கணவர், அவருடன் பழகியவர்கள், பணிபுரிபவர்கள் என பலரையும் போலீசார் விசாரிக்க தொடங்கினர். சித்ராவின் ரசிகர்களை பொருத்தவரை சித்ராவின் தற்கொலை இயற்கையாக நடந்து இருப்பதாக தெரியவில்லை என்றும் அவருடைய தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும் சந்தேகங்களை எழுப்பினர். ஆனால் அதன் பின்னர் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ராவின் தற்கொலை உறுதியானது.
எனும் சித்ராவின் தற்கொலையின் போது சித்ராவின் கண்ணத்தில், முகத்தில் காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்ததாக வெளியான தகவல்களை அடுத்து சித்ராவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று தொடர்ச்சியாக அவருடைய ரசிகர்கள் குரல் எழுப்பி வந்தனர். இன்னொருபுறம் இந்த விசாரணையை ஆர்டிஓ முடுக்கி விட்டது. இதனடிப்படையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவருடைய பெற்றோர், சித்ராவுடன் பணியாற்றியவர்கள் பலரும் விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இதனிடையே சித்ராவுடன் நெருங்கி பணிபுரிந்த சில தோழிகள் மற்றும் சக நடிகைகள் ஹேம்நாத் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர். சித்ராவின் தாயாரும் சித்ராவின் தற்கொலைக்கு ஹேமந்த் மீது குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அதை விசாரித்து வந்த போலீசார் அவரிடம் இருந்து சில தகவல்களை பெற்றதாக தெரிகிறது. அதனடிப்படையில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு நாட்களாக ஹேம்நாத் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கைது நடவடிக்கையை அதிரடியாக செய்துள்ளனர். கண்டிப்பாக சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத்துக்கு எதுவும் தெரியாமல் இருக்காது என்கிற அடிப்படையில் முதல் இரண்டு நாட்கள் ஹேம்நாத்தை காவல் நிலையத்தில் இருந்து வெளிவிடாமல் நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் வெளிவந்த தகவல்களாக, குறிப்பிட்ட தனியார் சேனலில் ஒளிபரப்பான தொடரில் நடித்து வந்த சித்ரா யாருடன் நெருக்கமாக டான்ஸ் ஆடி நடிக்கிறார் என்பது போன்ற சந்தேகங்கள் ஹேம்நாத்துக்கு எழுந்துள்ளது. அத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவை கண்காணிக்கும் வேலைகளையும் தொடர்ச்சியாக ஹேமந்த் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளன.
இதனால் சித்ரா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அத்துடன் பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பெரும் இழப்பு காரணமாக ஹேம்நாத் பொருளாதாரத்திற்காக சித்ராவை பெருமளவில் சார்ந்து இருந்தார் என்றும், பணத்தை அதிகம் செலவழித்து வந்தார் என்றும் கூறப்பட்டது.
இதனால் சித்ராவின் மன உளைச்சலுக்கு இந்த பொருளாதார சுமையும் காரணமாகியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மிகுந்த மன உளைச்சலில் இருந்த சித்ராவிடம், சந்தேகத்தின் காரணமாக ஹேம்நாத் தகராறில் ஈடுபட்டதாகவும், இந்த வாக்குவாதம் ஷூட்டிங் முடிந்து காரில் இருந்தே தொடங்கி , இவர்கள் தங்கி இருந்த நட்சத்திர விடுதி வரை தொடர்ந்ததாகவும், இதன் காரணமாக, சித்ரா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் சித்ராவை தற்கொலை செய்வதற்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு என் 306 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஆர்டிஓ நடத்தி வரும், விசாரணையில் நேற்றைய தினம் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றைய தினம் ஹேம்நாத்தை நேரில் வரவழைத்து விசாரிக்க, அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் நசரத்பேட்டை போலீசார் அதிரடியாக தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஹேம்நாத்தை கைது செய்துள்ளனர். எனினும் ஹேம்நாத்தின் பெற்றோரை ஆர்டிஓ அதிகாரிகள் இன்று விசாரிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
