சாதாரண ரூபத்தை 'விஸ்வரூபம்' எடுக்க வைக்குறாங்க...! 'தேர்தல் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக...' - கமல்ஹாசன் கண்டனம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 15, 2020 09:37 AM

நடிகர் கமலஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழக்கப்படாதது தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

kamalhaasan mnm party Torchlight logo not provided

2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிவருகிறது. இந்நிலையில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்டு அதன்பின் அதனை இழந்த கட்சிகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொண்டுள்ள மாநிலங்களைச் சோ்ந்த சில கட்சிகள் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதன்படி, தமிழகத்தில் அம்ம மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கி தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பிரஷா் குக்கா் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் பொதுச் சின்னமான பிரஷா் குக்கா் சின்னத்தில் அமமுக வேட்பாளா்கள் போட்டியிடுவா். இதேபோன்று, நாம் தமிழா் கட்சிக்கு கரும்புடன் விவசாயி இணைந்திருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் பேட்டரி டாா்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த சின்னமும் ஒதுக்கவில்லை. தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கோரிய பேட்டரி டாா்ச் லைட் சின்னமானது, எம்.ஜி.ஆா். மக்கள் கட்சி என்ற கட்சிக்கு பொது சின்னமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  பேட்டரி டார்ச் லைட் சின்னம் வழங்கப்படாததற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் எனவும் கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamalhaasan mnm party Torchlight logo not provided | Tamil Nadu News.