சித்ரா மரணம்... தொடரும் மர்மம்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?.. சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி கருத்து!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை சித்ரா வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் 5வது நாளாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்றும், அவர் அந்த முடிவை எடுக்க காரணம், தாய் மற்றும் கணவர் கொடுத்த மனஅழுத்தம் தான் எனவும், காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர்கள், நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரிடம் காவல்துறை தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, நாளை சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை தொடங்க உள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறுகையில், "நடிகை சித்ரா வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை செய்து கொண்டிருக்கிறோம். ஆதாரங்களை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
