ஆர்டிஓ விசாரணையில்... சித்ராவின் தாய் அதிர்ச்சி தகவல்!.. கடைசியாக மகளுடன் செல்போனில் பேசியது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் டி.வி.நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
இந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரிடம் 4 நாட்களாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாய் விஜயா ஆகியோர் அளித்த அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே 5-வது நாளாக நேற்று அவரிடம் நசரத்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், ஓட்டல் ஊழியர்கள் உள்ளிட்டவர்களிடமும் போலீசார் விசாரணை செய்தனர்.
அதைத்தொடர்ந்து, சித்ரா உடலை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணையை நடத்தினார். முதற்கட்டமாக, நடிகை சித்ராவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாய் விஜயா, "எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருடன் சண்டையிடவில்லை. எனது மகள் இறப்பதற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார்.
சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம். ஆர்.டி.ஓ. விசாரணையில் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளோம். எந்தவொரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்" என்று கூறினார்.

மற்ற செய்திகள்
