அவங்க '3 பேரும்' மாய பிம்பங்கள்.. 'இவரு' கண்ணியமானவரு.. அமைச்சர் ஜெயக்குமார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 20, 2019 04:12 PM

ரஜினியோடு இணைந்து அரசியல் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக செய்வேன் என மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார். அதேபோல நடிகர் ரஜினியும், கமலும் தமிழகத்தை ஆண்ட பின் விஜய்க்கு வழி விட வேண்டும் என்று விஜயின் அப்பா இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் குறிப்பிட்டார். இதனால் தற்போது அதிமுக அமைச்சர்கள் ரஜினி, கமல், விஜய்  மூன்று பேரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

TN minister Jayakumar criticized Rajini, Kamal and Vijay

அந்தவகையில் ரஜினி, கமல், விஜய் மூவரும் மாய பிம்பங்கள் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ''அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும். ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் , தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள். நடிகர் அஜித் கண்ணியமானவர், தொழில் பக்தி மிக்கவர்,'' என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.