24 வருஷத்துக்கு அப்புறம்.. ‘இந்த’ டிவி சேனலில்.. இன்று இரவு நேரலையில் பிரத்யேக பேட்டி கொடுக்கும் ரஜினி’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 21, 2019 05:54 PM

ரஜினி மக்கள் மன்றம் மட்டுமே இயங்கி வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த சமீபத்திய ஹாட் டாப்பிக்காகவே மாறி வருகிறார்.

details of exclusive interview superstar on DD News

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, திருவள்ளுவருக்கு இந்து அபிமானிகள் சிலர் மாலையிட்டு வழிபாடு செய்த பிறகு கருத்துச் சொன்ன ரஜினி, தன் மீதும் திருவள்ளுவர் மீதும் காவிச் சாயம் பூசப்பட முயற்சிப்பதாகவும், ஆனால் இருவருமே சிக்க மாட்டோம் என்றும் கூறினார். அதில் தொடங்கி ரஜினியின் மொழித்திணிப்பு கருத்து, அடுத்து கமலுடன் இணையவிருக்கிறாரா? பாஜகவுடன் இணைவாரா? ரஜினியின் அரசியல் கட்சி, கொள்கை, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை பற்றிஅவர்  எப்போது  வெளிப்படையாக பேசுவார்? என பல தரப்பிலும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இந்த சூழலில்தான், கோவா திரைப்பட விழா தொடங்குவதற்கு முன்பாக, ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.  அவ்விருதை தன்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக ரஜினி கூறியதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதோடு தமிழகத்தில் ஆளுமை மிக்க அரசியல் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியிருக்கும் இந்த பரபரப்பான சூழலில், இன்று (21, நவம்பர் 2019) இரவு 8.30 மணிக்கு தூர்தர்ஷன் இந்தியா (DD India) சேனலிலும், இரவு 9 மணிக்கு தூர்தர்ஷன் செய்தி (DD News)சேனலிலும் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளிக்கிறார். 1995-ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் அன்றுதான் (டிசம்பர் 12, 1995), ரஜினிகாந்த் டிவி சேனலுக்கு முதன் முதலில் பேட்டி கொடுத்தார் என்பதும் அது தூர்தர்ஷன் சேனல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #RAJINIKANTH #INTERVIEW #EXCLUSIVE #DDINDIA #DDNEWS #IFFIGOLDENJUBILEE #PRIDEICONOFINDIARAJINIKANTH #IFFI2019 #IFFIGOA