'நாளை' கட்சி பெயரை அறிவிக்கிறாரா 'ரஜினி'...? 'முதல் மாநாடு எங்கே'... நாளைய கூட்டத்தில் 'முடிவெடுக்க' வாய்ப்பு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 11, 2020 03:58 PM

சென்னையில் நாளை, ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் சந்திக்கும் ரஜினிகாந்த், கூட்டத்தின்போது, கட்சி அறிவிப்பு, முதல் மாநாடு எங்கே நடத்துவது என்பன உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajinikanth to decide on party announcement tomorrow

கடந்த 5 ம் தேதி நடிகர் ரஜினி காந்த் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி இருந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் மிஞ்சியது என கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் நாளை காலை 8 மணிக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு வரும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளைய கூட்டத்தில் கட்சி அறிவிப்பு குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், கட்சி மாநாட்டுக்கான இடம், தேதி உள்ளிட்டவைகளும் நாளைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் நாளையே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #RAJINIKANTH #RAJINI #PARTY ANNOUNCEMENT #RAGAVENDRA #DISTRICT SECRETARIES