‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை.. சென்னை கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த ‘அழகான’ பெண்குழந்தை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 24, 2020 03:51 PM

சென்னையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

Chennai corona suspect pregnant woman birth baby girl

சென்னையை சேர்ந்த 42 வயது நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அங்கமான ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டீவ் என ரிசல்ட் வந்தது.

இதனை அடுத்து அப்பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கொரோனாவில் மீண்ட அப்பெண் இன்று காலை 4 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஏற்கனவே அப்பெண்ணுக்கு 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.