சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் ‘இலவச உணவு’.. மாநகராட்சி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 23, 2020 12:24 PM

சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Chennai corporation announces free food at Amma unavagam

தமிழகத்தில் பொறுத்தவரை சென்னை மாநகராட்சில் 407 உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி, பொங்கல் விற்கப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்றவைகளும், மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் விற்கப்பட்டு வரும் இந்த உணவு வகைகள் ஊரடங்கால் பணத்தட்டுபாட்டுடன் சிரமப்படும் மக்களுக்கு கைக்கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இடம், பெயர், தொலைபேசி எண்ணைப் பெற்றுக்கொண்டு 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.