இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 24, 2020 12:37 PM

1. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,452 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களுடைய எண்ணிக்கை 718 ஆகவும், குணமடைந்தவர்களுடைய எண்ணிக்கை 4,813 ஆகவும் உயர்ந்துள்ளது.

Tamil News Important Headlines Read Here For More April 24

2. தமிழகத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

3. பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,155 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள தொற்றில் 75% சமூகப் பரவல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. தமிழகத்தில் மே மாதம் 4ஆம் தேதி முதல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் தொடங்கும் எனவும், மே 2,3ஆம் தேதிகளில் வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

5. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 3,176 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 49,759 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை அங்கு  8,66,646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

6. கொரோனா பரவலைத் தடுக்க ஞாயிறு முதல் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாட்களும், சேலம், திருப்பூரில் 3 நாட்களும் என முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

7. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் சதவீதம் 19.89 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

8. நாட்டிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

9. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உள்துறை அமைச்சக குழு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என உள்துறை இணை செயலாளர் புனியா சலீலா ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

10. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருமடங்காக உயரும் காலகட்டம் தற்போது 10 நாட்களாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

11. தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அனுமதி அளித்தும், 33 சதவீதம் ஊழியர்களுடன் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கலாம் எனவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

12. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 6வது இடத்துக்கு சென்றுள்ளது. அத்துடன் முதல் 10 இடங்கள் பட்டியலில் இருந்து கேரளா வெளியேறியுள்ளது. குஜராத் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

13. முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் அவருடைய வீட்டில் பணிபுரிந்துவந்த பெண் உயிரிழந்த நிலையில் இறுதிச்சடங்கு செய்து உடலை நல்லடக்கம் செய்துள்ளார்.