திரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்!.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு?'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sivasankar K | Jan 01, 2021 04:15 PM

இந்தியாவில் 1 கோடி பேர் கிட்டத்தட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மெல்ல கொரோனா கட்டுப்பாடுகளால் கட்டுக்குள் வந்துள்ளது.

Vijay Request to TN CM for 100% audience what happened

ALSO READ: ரசிகர்களின் அபிமான ‘ஹீரோக்களின்’ படங்கள் ரிலீஸ்.. '100% தளர்வுடன் திரையரங்குகள் இயங்குமா?'.. அமைச்சர் கூறிய முக்கிய தகவல்?

தற்போது தான் உலகம் முழுவதுமுள்ள நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்தும், பரிசோதனைக்கு உட்படுத்தியும், தன்னார்வலர்களுக்கு செலுத்தியும் வருகின்றன. பிரிட்டன் முதலான நாடுகள் பிரபல ஃபைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளன.

Vijay Request to TN CM for 100% audience what happened

ஆனாலும், உலக நாடுகள் இன்னும் இந்த தடுப்பூசிகள் 100 சதவீதம் கொரோனாவுக்கு மாற்றாக இருக்குமா என்பதை தீர்க்கமாக அறிய முடியாது என்பதால், எளிய மற்றும் அடிப்படை தடுப்பு முறைகளான மாஸ்க் அணிதல், சமூக விலகல், தன்மனித இடைவெளி உள்ளிட்டவற்றையே பின்பற்றி வருகின்றன.

Vijay Request to TN CM for 100% audience what happened

முன்னதாக புலம் பெயருவதால் கொரோனா பரவும் என்பதால், லாக்டவுன் எனும் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அவ்வாறு பல கட்ட லாக்டவுன்கள் அமலில் உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி திரையரங்குகள் இயங்கத் தொடங்கியுள்ளன.

Vijay Request to TN CM for 100% audience what happened

அதன்படி 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கி வருகின்றன. இதனிடையே விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி, திரைக்கு கொண்டுவரப்பட படக்குழு முனைப்புடன் பணியாற்றி வரும் நிலையில், முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்து திரையரங்குகளில் பொதுவாக அனைத்து படங்களுக்கும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி தரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Vijay Request to TN CM for 100% audience what happened

ஆனால் இந்த சந்திப்புக்கு பிறகு, ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அதே சமயம் திரைப்பட, சின்னத்திரை படப்பிடிப்புகளில், பணி புரிபவர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு இல்லை என்றும் தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் திரையரங்குகள் 100 சதவீதம் இயங்குமா என்பது பற்றி அந்த அறிக்கையில் குறிப்பிடப் படாததால், திரைத் துறையினரும் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ALSO READ: ‘மாஸ்டர் படத்துக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை’!.. திருச்சி பிரச்சாரத்தில் ‘முதல்வர்’ சொன்ன தகவல்..!

Vijay Request to TN CM for 100% audience what happened

அதே சமயம், திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vijay Request to TN CM for 100% audience what happened | Tamil Nadu News.