'இவன் கொரோனாவுக்கே அப்பன்!'.. 'மனித' குலத்தையே 'அழிக்க' வரும் அடுத்த 'பெருந்தொற்று'!.. எபோலாவை கண்டுபிடித்த 'மருத்துவ விஞ்ஞானி' கூறிய 'அதிர்ச்சி' தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்மனிதகுலத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இன்னொரு புதிய பெரும் தொற்று நோய் இருப்பதாக எபோலோவை கண்டறிந்த மருத்துவர் மீண்டும் எச்சரித்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
![fast spreading new deadly Disease Doctor discovered Ebola opens up fast spreading new deadly Disease Doctor discovered Ebola opens up](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/fast-spreading-new-deadly-disease-doctor-discovered-ebola-opens-up.jpg)
கடந்த ஒரு வருடமாக சீனாவில் உருவான கொரோனா வைரஸால் உலகமே பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வந்தது. வாழ்வாதாரம், பொருளாதாரம் என பல கட்டங்களாக இழப்பை சந்தித்த மனிதர்கள், பலர் தங்களுக்கு பிரியமானவர்களையும் கொரோனாவால் இழந்தனர். இதனால் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி பல்வேறு சிரமங்களைக் கடந்து தற்போது சாத்தியமாகி தடுப்பூசிகள் போடப்பட தொடங்கியுள்ளன. இப்படி தற்போது அனைவரும் மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக வெளியான தகவலும், மேலும் கிறுகிறுக்க வைத்தது. இதனிடையே அண்மையில் ஆந்திராவில் எபிலெப்ஸி, கேரளாவில் ஷாகில்லா முதலான வைரஸ்கள் மீண்டும் பரவத் தொடங்கி மக்களை பதற்றத்துக்குள்ளாகினர்.
இந்த நிலையில் தான், 1976ல் எபோலா தொற்று நோயை கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் மற்றும் பேராசியர் Dr Jean-Jacques Muyembe Tamfum மனிதகுலம் அபாயகரமான புதிய வைரஸை மீண்டும் எதிர்கொள்ள இருப்பதாக கூறி இருக்கிற தகவல் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து புதிய மற்றும் மனித குலத்துக்கு அபாயகரமான விளைவுகளை உண்டு செய்யக்கூடிய வைரஸ்கள் உருவாகி உள்ளதாக கூறிய இவர் இந்த வைரஸ்கள் மனிதகுலத்திற்கு மொத்தமாக பேரழிவை உண்டாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பெருந்தொற்றை விடவும் இப்போது உருவாகி உள்ள இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று கூறிய இவர் மிக விரைவில் இந்த வைரஸ் பரவக் கூடியது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் விசித்திரமான அறிகுறிகளுடன் விலங்குகளிடம் இருந்து பரவியிருக்கலாம் என கருதப்படும் இந்த நோயால் காங்கோ நாட்டில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலில் அவருக்கு எபோலா பாதிப்பு இருக்கலாம் என்று கருதி அவருக்கு பரிசோதனையை மேற்கொண்ட போது அவருக்கு எபோலா இல்லை என்பது உறுதியாகியதாகவும், அதேசமயம் மருத்துவ உலகம் அஞ்சுவது போன்ற ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அவருக்கு அபாயகரமான தொற்று இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. எனவே இந்த நோயாளி பாதிக்கப்பட்டுள்ளது பெயரிடப்படாத அந்த அபாயகரமான தொற்று நோயால்தான் என்றும், இது ஒரு அனுமானம் மட்டுமே என்றாலும் கூட , அது நிகழ்ந்தால் உலகம் முழுவதற்கும் பெரிய அழிவுக்கு அது வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)