'விராட் கோலி'யின் 'தலைமுடியை'... 'கொத்தாக' பிடிக்கும் 'தைரியம்'... 'அனுஷ்கா சர்மாவுக்கு' மட்டுமே 'உண்டு'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 28, 2020 11:01 PM

அனுஷ்கா சர்மா விராட் கோலிக்கு சிகையலங்காரம் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

Anushka hairstyle for the viratkohli-Amazing love video

கொரோனா அச்சம் காரணமாக இந்தியா முழுக்க 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இத்தருணத்தில் பொதுமக்கள் பிரபலங்கள் என பலரும் வீட்டில் இருந்த படியே விழிப்புணர்வு வீடியோக்களையும், பொழுதுபோக்கு வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களும் அடிக்கடி இதுபோன்ற சுவாரஸ்யமான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதிலும் கேப்டன் வீரர் விராட் கோலி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

தற்போது அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா தனது ட்விட்டர் பக்கக்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அனுஷ்கா ஷர்மா விராட் கோலிக்கு சிகையலங்காரம் செய்கிறார். அதில் விராட் கோலி, "இந்த வீடியோவை உங்களுக்காக பதிவிடுகிறோம், என் மனைவி கிச்சன் கத்திரியை பயன்படுத்தி எனக்கு சிகையலங்காரம் செய்கிறார்" என குறிப்பிடுகிறார்.

 

தற்போது அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு முன்பாக, ஷிகர் தவான் தனது வீட்டில் துணி துவைக்கும் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டது.

Tags : #CORONA #CURFEW #VIRATKOHLI #ANUSHKASHARMA #HAIRSTYLE