‘கொரோனா’ அச்சுறுத்தலால் ஏற்படும்... தேவையற்ற ‘பயத்தை’ போக்க... ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வழங்கும் ‘புதிய’ சேவை...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Mar 28, 2020 07:23 PM

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும் வகையில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

Coronavirus Jio Airtel Launch Covid19 Self Diagnosis Tool

ஒருவருக்கு கொரோனா பாதிக்கும் ஆபத்து உள்ளதா என கண்டறிய உதவும் இந்த சேவையில் பயனாளர் கொடுக்கும் உடல் ஆரோக்கியம், பயண வரலாறு உள்ளிட்ட விவரங்களை வைத்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா எனத் தெரிவிக்கப்படும். மைஜியோ செயலியில் கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ டூல் பயனாளரின் வயது, ஆரோக்கியம், பயண விவரங்கள் மற்றும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவருடன் ஏதேனும் தொடர்புண்டா போன்ற விவரங்களை கேட்டு பிறகு அதன் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு, சராசரி மற்றும் அதிகம் என மூன்று நிலைகளில் தெரிவிக்கும். அத்துடன் மூன்று நிலைகளில் பயனாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் ஜியோ வழங்குகிறது. இதுதவிர ஜியோ டூல் தேசிய மற்றும் மாநில அளவில் பயனாளர் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்களையும் வழங்குகிறது.

கொரோனா பாதிக்கும் ஆபத்து உள்ளதா என கண்டறிய உதவும் ஏர்டெல் டூல் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோவின் டூல் போலவே ஏர்டெல் சேவையிலும், பயனாளருடைய வயது, அறிகுறி போன்ற விவரங்களின் அடிப்படையில் அவர்களுக்கான பரிந்துரைகைகள் வழங்கப்படும். மேலும் இந்த 2 சேவைகளிலும் கொரோனா தொற்று பற்றிய அடிப்படை விவரங்கள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், இதை வைத்து ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதும் போது, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

Tags : #CORONAVIRUS #AIRTEL #JIO