பிரபல 'ஹாலிவுட்' நடிகர் 'மார்க் ப்ளம்...' 'கொரோனா' காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 'காலமானார்...' 'திரையுலகினர் பெரும் அதிர்ச்சி...'
முகப்பு > செய்திகள் > உலகம்பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஹாலிவுட் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. உலகிலேயே அதிகபட்சமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் ஹாலிவுட் திரை நட்சத்திரங்களும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாலிவுட் நடிகர்கள் இத்ரிஸ் எல்பா, கிறிஸ்டோபர் ஹிவ்ஜு, ஹாலிவுட் நடிகை இந்திரா வர்மா, ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ, ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை ஒல்கா குரிலென்கோ உள்ளிட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 69 வயதான அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்க் ப்ளம் 1970-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1985-ல் வெளியான ‘டெஸ்பரேட்லி சிக்கிங் சூஸன்’ என்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததற்காக பாராட்டப்பட்டார். ‘ஜஸ்ட் பிட்வீன் பிரண்ட்ஸ்’, ‘க்ரொக்கடைல் டண்டி’, ‘பிளசண்ட் டே’, ‘லவ்சிக்’, ‘த பிரசிடியோ’ உள்ளிட்ட பல படங்களில் மார்க் ப்ளம் நடிப்பு பேசப்பட்டது.
Desperately Seeking Susan படத்தில் மார்க்பிளம்முடன் நடித்த நடிகை மடோனா அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்த மார்க்ப்ளமின் குடும்பத்தினர் மற்றும் அவரது அன்பிற்குரியவர்களுக்கு தனது இதயம் கனிந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் வேடிக்கையானத அல்ல. நம்மை ஒன்றும் செய்யாது என நினைத்து சாதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதை மார்க்கின் மறைவு நமக்கு உணர்த்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.