'இது தடுப்பூசி இல்ல'... 'ஆனா இது மூலம் கொரோனாவ கட்டுப்படுத்தலாம்'... பெங்களூர் டாக்டர் அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளதாக பெங்களூர் மருத்துவர் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் பாதிப்பு பல உலக நாடுகளை முடக்கி போட்டுள்ளது. இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 19 பேர் மரணமடைந்துள்ள நிலையில், 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரசிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ், கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. தற்போது நாங்கள் கண்டுபிடித்திருக்கும் சிகிச்சை முறை, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும்.
இதன்முலம் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடும். ஆனால் இந்த மருந்து கொரோனா வைரஸின் "தடுப்பூசி" அல்ல என விளக்கமளித்துள்ளார். மேலும் எங்களுடைய சிகிச்சையில் கொரோனா நோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக, அவர்களுக்கு ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்ககள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முயற்சியில் நாங்கள் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறோம். இந்த ஆய்வின் முதல் தொகுப்பு இன்னும் சில நாட்களில் தயாராகலாம்'' என டாக்டர் விஷால் ராவ் தெரிவித்துள்ளார்.